பிரபல பாடசாலை களுக்கான புலமைப் பரிசில் வெட்டுப் புள்ளி

4 t
4 t

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இவ்வருடம் (2019) வெளியாகிய பெறுபேறுகளின் அடிப்படையில் பிரபல பாடசாலைகளில் தரம் 6 இற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான குறைந்த பட்ச வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கு  332,179 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

இதன் பெறுபேறுகள் கடந்த ஒக்டோபர் 06 ஆம் திகதி பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருந்தன. இதன்படியே பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு,

ஆண்கள் பாடசாலை – வெட்டுப் புள்ளிகள்

  1. கொழும்பு ரோயல் கல்லூரி – 180
  2. கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரி – 172
  3. பருத்தித்துறை ஹாட்லி கல்லுரி – 169
  4. டி.எஸ் சேனாநாயக்க கல்லூரி, கொழும்பு 07 – 167
  5. மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி – 167
  6. இசிபத்தான கல்லூரி, கொழும்பு 05 – 164
  7. சாய்ந்தமருது சாஹிரா கல்லூரி – 160
  8. ஓட்டமாவடி மத்திய கல்லூரி – 158
  9. யாழ். இந்துக் கல்லூரி – 160
  10. புத்தளம் ஷாஹிரா தேசிய கல்லூரி – 155
  11. பம்பலபிட்டி ஹிந்துக் கல்லூரி – 154
  12. திருகோணமலை கோணேஸ்வரா இந்து கல்லூரி -154
  13. மன்னார் புனித சேவியர் கல்லூரி – 154
  14. மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரி – 153
  15. மட்டக்களப்பு மெதடிஸ்ட் மத்திய கல்லூரி – 153
  16. பதுளை சரஸ்வதி கல்லூரி – 151

பெண்கள் பாடசாலை – வெட்டுப் புள்ளிகள்

  1. கண்டி, பெண்கள் உயர்தர பாடசாலை – 179
  2. பம்பலப்பிட்டி, முஸ்லிம் மகளிர் கல்லூரி – 175
  3. பருத்தித்துறை, மெதடிஸ்ட் பெண்கள் உயர்தர பாடசாலை – 167
  4. ஹட்டன், புனித கெப்ரியல் பெண்கள் கல்லூரி, – 166
  5. வின்சென்ட் பெண்கள் உயர்தர பாடசாலை, மட்டக்களப்பு – 165
  6. திருகோணமலை, ஶ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி – 165
  7. கண்டி, புனித அந்தோனியார் பெண்கள் பாடசாலை – 164
  8. யாழ்ப்பாணம், வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை – 162
  9. கல்முனை, மஹ்மூத் பாலிகா கல்லூரி – 162
  10. கண்டி, பதியுத்தீன் மஹ்மூத் பாலிகா வித்தியாலயம் – 161
  11. கொழும்பு 06, புனித கிளயார்ஸ் பாலிகா மகா வித்தியாலயம் – 160
  12. பம்பலப்பிட்டி, இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி – 159
  13. யாழ். ஹிந்து மகளிர் கல்லூரி – 158
  14. புத்தளம், பாத்திமா பெண்கள் மகா வித்தியாலயம் – 156
  15. மட்டக்களப்பு, புனித சிசிலியா பெண்கள் கல்லூரி – 155
  16. காத்தான்குடி, மீரா பாலிகா மகா வித்தியாலயம் – 153
  17. பருத்தித்துறை, வடமராட்சி ஹிந்து பெண்கள் கல்லூரி – 153
  18. மன்னார், புனித சேவியர் பெண்கள் கல்லூரி – 152
  19. வவுனியா, சைவப்பிரகாசம் பெண்கள் கல்லூரி – 152

கலவன் பாடசாலை – வெட்டுப் புள்ளிகள்

  1. ஹட்டன், ஹைலண்ட்ஸ் கல்லூரி – 168
  2. கார்மெல் பற்றிமா கல்லூரி – 166
  3. கொழும்பு 12, விவேகானந்தா கல்லூரி – 163
  4. மல்வானை, அல் முபாரக் கல்லூரி – 163
  5. கெக்குணுகொல்ல தேசிய பாடசாலை – 160
  6. மாவலனல்லை, சாஹிரா முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் – 160
  7. மாவனல்லை, பதுரியா மகா வித்தியாலயம் – 160
  8. சம்மாந்துறை, மத்திய கல்லூரி – 160
  9. ஹப்புகஸ்தலாவ, அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலை – 159
  10. மூதுர், மத்திய கல்லூரி – 159
  11. அட்டாளைச்சேனை, மத்திய கல்லூரி – 158
  12. கொட்டகலை, கேம்பிரிட்ஜ் கல்லூரி – 158
  13. கரவெட்டி, நெல்லியடி மத்திய கல்லூரி – 158
  14. கம்பளை, ஷாஹிரா கல்லுரி – 157
  15. கொக்குவில், கொக்குவில் இந்து கல்லூரி – 156
  16. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி – 155
  17. மடவளை பஸார், மதீனா தேசிய பாடசாலை – 154
  18. மஸ்கெலியா, புனித ஜோசப் தமிழ் வித்தியாலயம் – 154
  19. ஹாலி எல, ஊவா விஞ்ஞான கல்லூரி – 154
  20. ஏறாவூர், அலிகார் மத்திய கல்லூரி – 153
  21. சாவகச்சேரி, இந்து கல்லூரி – 153
  22. அக்கரைப்பற்று, ஶ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி – 153
  23. திருக்கோவில், தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் – 153
  24. வவுனியா, தமிழ் மத்திய மகா வித்தியாலம் – 152
  25. அநுராதபுரம், ஷாஹிரா மகா வித்தியாலயம் – 152