கடல்களே இல்லாத பூமியா!

1576303198 1775
1576303198 1775

கடல்களே இல்லாமல் பூமி இருந்தால் எப்படி இருக்கும் என்ற விபரீத யோசனை ஒன்று நாசா விஞ்ஞானி ஒருவருக்கு தோன்றியது.

இது தொடர்பாக புகைப்படம் ஒன்றும் வெளியாகி உள்ளது.

இதனை ஜேம்ஸ் ஓ டோனோகு என்ற ஜப்பானிய விஞ்ஞானி அனிமேஷன் படத்தை டைம்லாப்ஸ் முறையில் தயாரித்துள்ளார்.

குறித்த புகைப்படத்தில் 10 மீட்டருக்கு கீழே செல்லும் கடலின் நீர்மட்டம் அடுத்த சில நொடிகளில் 130 மீட்டர், 200 மீட்டர் என வேகம் கொண்டு இறுதியில் 5000 மீட்டருக்கும் அப்பால் கடல் நீர் வற்றிப்போவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி இந்தப் படத்தில் காட்டப்படுகின்றது.

இறுதியாக தண்ணீர் முழுமையாக நீர் வற்றிப்போவதால் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்காவில் பாலைவனம் நிலப்பரப்பு அதிகமாவதையும் காட்டியுள்ளது.