பயண நேரத்தை பாதியாக குறைக்க மீண்டும் வருகிறது நவீன சூப்பர் சோனிக் விமானங்கள்

nasa plane
nasa plane

தற்போது உள்ள கொன்கோட் சூப்பர் சோனிக் விமானங்களை விடவும் வேகம் கூடியதும், சத்தமின்றி பயணிக்கக்கூடியதுமான நவீன சூப்பர் சோனிக் விமானத்தினை தயாரிக்க நாசா திட்டமிட்டிருந்தது.

இதற்கான அனுமதி தற்போது கிடைக்கப்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விமானமானது நியூயோர்க்கிலிருந்து சுமார் மூன்றரை மணி நேரத்தில் பாரிஸ் நகரிற்கு பறக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்படவுள்ளது.

அதாவது இவ் விமானம் தற்போது உள்ள சூப்பர் சோனிக் விமானங்களை விடவும் நான்கு மடங்கு வேகம் கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் திட்டத்திற்காக சுமார் 250 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு முதன் முறையாக குறித்த விமானம் பரிசோதனைக்கு உட்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.