அமெரிக்காவில் பனிமூட்டம் காரணமாக 60 கார்கள் மோதி விபத்து

usa2
usa2

அமெரிக்காவில் கடும் பனிமூட்டம் நிலவியமையின் காரணமாக 60 இற்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளகியுள்ளது.

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணம் வில்லியம்ஸ்பர்க் நகரில் உள்ள நெடுஞ்சாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனால் 50 இற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

இதனையடுத்து நெடுஞ்சாலை உடனடியாக மூடப்பட்டு மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து கார்களுக்குள் சிக்கியிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.

பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய கார்கள் அனைத்தும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் நெடுஞ்சாலை போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டது.