பாரம்பரிய கிறிஸ்மஸ் பேரீச்சம்பழ கேக் இப்படியா செய்வது!

chritmas chocolate cake 200x200
chritmas chocolate cake 200x200

கிறித்தவர்களுக்கு கிறிஸ்மஸ் பண்டிகை என்றாலே போதும் வீடுகளின் பலகாரங்கள் , கேக்குகள் செய்வது வழக்கம்.

அதில் மிகவும் பிரசித்தி பெற்ற கிறிஸ்துமஸ் பேரீச்சம் பழ கேக் எப்படி செய்வது என்பதை இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • விதை நீக்கிய பேரீச்சம்பழம் – 20
  • மைதா – அரை கப்
  • பால் – அரை கப்
  • சர்க்கரை – தேவையான அளவு
  • சமையல் சோடா – கால் டீஸ்பூன்
  • எண்ணெய் – சிறிதளவு
  • வால்நெட் முந்திரி பருப்பு – தேவையான அளவு
  • வெண்ணெய் – சிறிதளவு
செய்முறை

பேரீச்சம் பழங்களை பாலில் அரை மணிநேரம் ஊறவைத்து கொள்ளவும்.

பின்னர் அதனுடன் சர்க்கரை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

இந்த கலவையுடன் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.

அகன்ற பாத்திரத்தில் மைதாவையும் சமையல் சோடாவையும் கலந்து வைத்து கொள்ளவும்.

பின்னர் பேரீச்சம் பழ கலவையுடன் மைதா மாவு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும்.

இறுதியில் வால்நெட் முந்திரி பருப்புகளை தூவிக்கொள்ளவும். பின்னர் பேக்கிங் பேனில் வெண்ணெய் தடவி கலவையை ஊற்றி பரப்பி மைக்ரோ ஓவனில் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.