இப்படி உங்கள் சமையலறை இருந்தால் மன நிம்மதி தேடி வருமாம் !

20181224 201628
20181224 201628

வீட்டின் அதிமுக்கிய அறை என்றால் அது சமையலறைதான் என்று பெண்கள் கூறுவதுண்டு.

சமையறைக்கு வாஸ்து பாக்க வேண்டியது ஓர் முக்கியமான செயல் ஒன்றாகும்.

அந்தவகையில் வாஸ்துப்படி சரியான முறையில் சமையலறையை அமைத்திருந்தால் தான் நேர்மறை எண்ணங்கள் வளரும் என்று கருதப்படுகின்றது.

தற்போது சமையறைக்கு தேவையான வாஸ்து குறிப்புகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

நெருப்பு என்பது வீட்டின் தென் கிழக்கு திசையில் இருப்பது ஐதீகம் என்பதால் சமையலறையை அந்த இடத்தில் அமைக்க வேண்டும்.

சமையலறையில் பூசப்படும் வண்ணமானது மஞ்சள், ரோஸ் , ஆரஞ்சு, சிவப்பு அல்லது கருஞ்சிவப்பு நிறங்களாக இருக்க வேண்டும். சமையலறையில் கருப்பு நிறத்தைத் தவிர்க்கவும்.

தண்ணீர் தொட்டி, சிங்க், குடிநீர் அமைக்க முடிவு செய்தால் அதை வட கிழக்கு திசையில் அமைக்க வேண்டும்.

சமையல் எரிவாயுவுக்கும் தண்ணீர் தொட்டிக்கும் இடைவெளி விட்டு அமைக்க வேண்டும்.

கிழக்கு திசை நோக்கிதான் ஜன்னல் பொருத்த வேண்டும்.

சிறிய ஜன்னல் பொருத்துவதாக இருப்பின் தென் திசையில் பொருத்தலாம்.

சாப்பாடு மேசை சமையலறையில் நடுப் பகுதியில் வைப்பதை தவிர்க்கவும். அதற்கு பதிலாக வட கிழக்குப் பகுதியில் வைப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களின் உடல் ஆரோக்கியம் காக்கப்படும்.