கற்ப காலத்தில் நீங்கள் உறங்கும் முறை பாதுகாப்பானதா !

admin panel image 9a686fae 11f0 4c60 95dc 6425e068241e 1500472108194
admin panel image 9a686fae 11f0 4c60 95dc 6425e068241e 1500472108194

கர்ப்ப காலத்தில் பெண்கள் எப்போது பாதுகாப்புடன் இருத்தல் மிகவும் அவசியம். அந்த வகையில் உறங்கும் போது கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள்.

புரண்டு படுத்தால் குழந்தை கொடி சுற்றிப் பிறக்கும் எனக் கூறப்படுவது உண்மையல்ல.

இருப்பினும் எழுந்து உட்கார்ந்து பிறகு மெதுவாக படுப்பதுவே சிறந்தது.

ஏதாவது ஒரு கை புறமாக படுப்பதே நல்ல படுக்கை முறை. அதிலும் இடது கைப்புறமாக படுப்பது மிகவும் அவசியம்.

மல்லாந்து படுக்கும் போது கருப்பை இரத்தக் குழாய்களை அழுத்துவதால் மூச்சுத்திணறல், இரத்த ஓட்டக்குறை போன்றவை உண்டாகலாம்.

கர்ப்பிணிகள் எக்காரணத்தை கொண்டும் குப்புற படுக்க கூடாது.

இரவு நேரத்தில் எளிதில் உறக்கம் வராது எனவே சிறிது தூரம் மெதுவாக நடந்துவிட்டு வந்து உறங்கலாம். அசதியில் உறக்கம் வரும்.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பாக வெது வெதுப்பான நீரில் குளித்து விட்டு உறங்கச் செல்வது நன்மை தரும்.