சரும தளர்ச்சி நீங்கி முகம் பளிச்சிட; இதனை பூசுங்கள்

 சருமம் வேண்டுமா
சருமம் வேண்டுமா

பொதுவாக அனைத்து பெண்களும் வயதாகும் போது சந்திக்கு பிரச்சனைகளுள் ஒன்று தான் சருமத்தளர்ச்சி.

முகத்தின் சதைகள் தளரும் போது சருமம் தொங்கி சுருக்கங்கள் தோன்றுகிறது.

அத்தகைய சருமத்தின் தளர்ச்சியை போக்கும் இயற்கை பொருட்களை வைத்தே சரி செய்ய முடியும்.

அந்தவகையில் சரும தளர்ச்சியை போக்கும் அற்புத பேஸ் பேக் ஒன்றை பற்றி இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
பாதாம் – 4
பாலில் ஊறவைத்த ஒட்ஸ் – 4 டீஸ்பூன்
பாலில் ஊறவைத்த ஒரு சிட்டிகை குங்குமப்பூ
கடலைமாவு – 2 டீஸ்பூன்

செய்முறை

பாதாமை பவுடர் செய்து கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் அரைத்த பாதாம் பவுடரை போட்டு அதனுடன் பாலில் ஊறவைத்த ஓட்ஸ் மற்றும் குங்குமப்பூவை சேர்த்து கலந்துகொள்ளவும்.

இதனுடன் கடலைமாவு சேர்த்து குழைத்துக்கொள்ளவும். சில நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.

இந்த பேஸ் பேக்கை பூசுவதற்க்கு முன், பால் வைத்து முகத்தை நன்கு சுத்தப்படுத்த வேண்டும்.

முகத்தில் பால் தடவிவிட்டு, பஞ்சினால் துடைத்து எடுக்கவும். பாலிலுள்ள லாக்டிக் அமிலம், சருமத்தை மிருதுவாகவும் பளிச்சென்றும் ஆக்கும்.

அதன்பின் சில நிமிடங்கள் கழித்து, பேஸ் பேக்கை நீக்கினால் போதும். முகம் தளர்ச்சியின்றி, பளிச்சென மாறியிருக்கும்.