தொண்டை வலியால் அவதி படுகிறீர்களா ! இதோ தீர்வு

images 1 2
images 1 2

தொண்டை வலி என்பது அனைத்து வயதினருக்கும் வரக்கூடிய வலியாக தான் இருக்கிறது.

பொதுவாக பலருக்கு சளி பிடிக்கும் நேரத்தில் தொண்டை வலி வரக்கூடும்.

தொண்டை வலியை போக்க கூடிய சில எளிய வைத்திய முறைகள் பற்றி இங்கு பார்ப்போம்.

வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு தேன் கலந்து குடிக்கலாம். இதன் மூலம் தொண்டை புண்கள் ஆறும், தொண்டை வலியும் நீங்கும்.

சுக்கி, மிளகு, திப்பிலி மூன்றையும் வறுத்து நன்கு பொடி செய்து சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டை வலி சரியாகும்.

வெதுவெதுப்பான நீரில் உப்பு சிறிதளவு சேர்த்து தொண்டையில் படும்படு அடிக்கடி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி நிவாரணம் அடையும்.

பால் இல்லாமல் தேநீருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு ஓடிவிடும்.

முந்திரிப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு சற்று தள்ளியே நிற்கும்.