மக்களின் வலிகளை ஆற்றுப்படுத்த வேண்டிய தேவையுள்ளது – பிரின்ஸ் சரோஜினி

14a
14a

வட மாகாண மக்களின் வேதனைகளையும் வலிகளை ஆற்றுவதற்கான உத்தரவாதத்தோடு தான் இங்கு வந்திருப்பதாக வட மாகாண ஆளுநர் பிரின்ஸ் சரோஜினி மன்மதராஜா சார்ள்ஸ் தெரிவித்தார்.

வட மாகாண ஆளுநரின் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

“நான் பதவியேற்ற போது என்னிடம் சொல்லப்பட்ட ஒரே ஒரு விடயம் வட மாகாண மக்கள் நிறைய வேதனைகளோடும் வலிகளோடும் காயங்களோடம் இருக்கின்றார்கள். அவற்றை ஆற்றுப்படுத்த வேண்டிய ஒரே ஒரு தேவை தான் எமக்கு இருக்கின்றது.

அந்த மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அந்த மக்களுக்கு இதுவரை கிடைக்காமல் உள்ள எந்தவொரு விடயங்களோ அவற்றை எல்லாம் செய்த முடிப்பதற்கான சகல அதிகாரத்தையும் அதற்கான சகல ஒத்துழைப்பையும் ஜனாதிபதி செயலகம் வழங்குமென்று தான் அந்த உத்தரவாத செய்தியோடு தான் நான் இங்கு வந்திருக்கின்றேன்.

ஜனாதிபதியின் செயலாளர் எங்களுக்கு கூறிய முக்கியமான ஒரு விடயம் என்னவெனில் வட மாகாணத்தில் மட்டுமல்ல எந்த இடத்திலும் இருக்கின்ற முதலாவது வைத்தியசாலைகளின் தேவை இரண்டாவது கல்வித்துறையிலே காணப்படுகின்ற தேவைகள் அடுத்ததாக இங்கு காணப்படுகின்ற உட்கட்டமைப்பு வசதிகள் மக்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் விவசாய வசதிகள் போன்றவற்றை உடனடியாகச் செய்து கொடுக்கும் படியாக பணிப்புரை விடுத்திருக்கின்றார்.

அதற்கான வேலைத் திட்டங்களை நிச்சயமாக விரைவாக ஆரம்பிப்பதற்கு அதிகாரிகளுக்கு நான் உறுதுணையாக இருப்பேன். அரசியல் கொள்கைகளுக்கு அப்பால் முரண்பட்ட கருத்துக்களுக்கு அப்பால் இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் வர்க்க முரண்பாடுகளுக்கு அப்பால் ஒரு ஆளுநராக மட்டுமல்ல உங்களுடைய இந்த மாவட்டத்தின் மாகாணத்தின் ஒருவராக இந்த மாகாணத்திலே முன்னெடுக்க இருக்கிறேன்.

உங்களுக்கான அத்தனை விடயங்களையும் பார்த்து அவற்றை எவ்விதம் செய்கின்ற என்ற அடிப்படையில் ஜனாதிபதி செயலகத்துடன் நான் கலந்தரையாடி அந்த விடயங்களை முடித்து வைப்பதற்கான முயற்சியை நான் நிச்சயமாக மேற்கொள்வேன்.

உங்களுக்கும் ஜனாதிபதி செயலகத்திற்கும் இங்கிருக்கின்ற மக்களுக்குமான இணைப்பு பாலமாக ஆளுநர் செயலகம் செயற்படும்.

அனைத்த விடயங்களிலம் உங்கள் ஆதரவு எனக்குத் தேவை. பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறேன்” என தெரிவித்தார்.