தொலைபேசிகளால் பரவும் வினோத நோய்கள் – அதிர வைக்கும் தகவல்!

M2 4
M2 4

இன்றைய காலக்கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கையில் பார்த்தாலும் கைத்தொலைபேசி காணப்படுகின்றது.

இருந்தாலும் இது இன்றை உலகில் ஆளைக் கொல்லும் அரக்கனாக மாறிவிட்டது.

ஏனென்றால் சமீபத்தில் நடத்திய ஆய்வொன்றில் கைத்தொலைபேசி மோகத்தால் பல்வேறு புதிய பாதிப்புகள் பரவிக் கொண்டிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

தொலைபேசிகளின் இயக்கங்களுக்கு பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களை அதிகமாக பயன்படுகின்றது. இதனால் பெருவிரலில் மற்றும் முன்கை, மணிக்கட்டுகளில் அதிக வலி ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு தொலைபேசி விளையாட்டுகள் மற்றும் காணொளி விளையாட்டுகளில் மூழ்கி உள்ளவர்கள் பெரும்பாலானவர்கள் தீவிர விளையாட்டு ஆர்வத்துக்கு உள்ளாகிறார்கள் என்கிறது.

இதனால் தூக்க குறைவு, அலுவலக வேலை மற்றும் பொறுப்புகளில் பிடிப்பின்மை, அன்றாட வாழ்க்கையில் சலிப்பு கொண்டவர்களாக இவர்கள் காணப்படுகிறார்கள்.

பலருக்கு தினசரி ஒரு செல்பி படமாவது சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டும் என்னும் மனநிலைக்கு மாறி உள்ளனர். இல்லாவிட்டால் அவர்கள் கவலையில் தள்ளப்படுகிறார்கள்.

அளவுக்கு அதிகமாக தலையை சாய்த்து வைப்பது கழுத்து தசை பாதிப்புக்கு காரணமாகிறது.

அப்போது கழுத்தில் 60 பவுண்ட் அழுத்தம் ஏற்படுவதாக மதிப்பிடுகின்றனர். இது கழுத்து தசைகளில் பிடிப்பு, வலி ஏற்பட காரணமாகிறது.

கணினிகள், தொலைபேசிகளின் திரைகளை மணிக்கணக்கில் பார்வையிடும் போதுகண்கள் உலர்வடைதல், கண் வலி மற்றும் பார்வைச் சிதைவு ஏற்படுகின்றன.

இதிலிருந்து விடுபட கண்களுக்கு நேரான அல்லது சற்று கீழிறங்கிய நிலையில் திரைகளை வைத்து பணி செய்வதும், பார்வையிடுவதும் கழுத்து பாதிப்புகள், கண் பாதிப்புகளை குறைக்கும் என்று அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.