உரித்தால் கண்ணீர் வராதா வெங்காயம் அறிமுகம்

1565959148 2362
1565959148 2362

உரித்தால் கண்களில் கண்ணீர் வரவைக்காத புதிய வெங்காயத்தினை ஜப்பான் நிறுவனம் கண்டறிந்துள்ளது.

வெங்காயத்தை உரிக்கும் வேளையிலும், நறுக்கும் வேளையிலும் கண்ணீர் வருவதை கண்டு, இவ்வளவு கஷ்டப்பட்டு உள்ளே ஒன்றுமே இல்லாத ஒரு வெங்காயத்தை நாம் ஏன் உரிக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்திருப்பார்களோ, என்னவோ.

வெங்காயத்தில் கத்தி படும் வேளையில் அது வெளியேற்றும் வேதிக்கலவை தான் இந்த கண்ணீருக்கான காரணம் என்பதை கண்டறிந்த ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள், அந்த வேதிக்கலவை நீக்கப்பட்ட வெங்காய வித்துக்களை சமீபத்தில் உருவாக்கினர்.

அவற்றை நட்டு, வளர்த்து இந்த நவீன வகை வெங்காயங்களை விளைவித்து தற்போது சாதனை படைத்துள்ளனர்.

இதற்கான காப்புரிமையை பெற்றுள்ள ஒரு ஜப்பானிய நிறுவனம், இந்த வெங்காயம் வர்த்தக ரீதியாக விற்பனைக்கு வருமா என்பது தொடர்பாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

ஆனார் நம்மவர்கள் கண்ணீர் வராமல் வெங்காயத்தை உரிப்பதற்காக வெங்காயத்தை நீரில் ஊறவைத்து வெட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.