பிக்பாஸ் சீசன்-3 வெற்றியாளராக முகென் ராவ்

title winner
title winner

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் மலேஷியாவைச் சேர்ந்த முகென் ராவ் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந் நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பி வந்திருந்தது.

முதல் 2 சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், 3வது சீசனையும் தொகுத்து வழங்கியிருந்தார்.

பரபரப்பாக நடைபெற்றிருந்த பிக்பாஸ் தொடரானது 105 நாட்களை கொண்டதாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது,

கடந்த ஜூன் 23இல் மூன்றாவது சீசன் தொடங்கியிருந்த நிலையில் அதில் கவின், லாஸ்லியா மரியனேசன், முகன் ராவ், சாண்டி, ஷெரின், தர்ஷன், சேரன், வனிதா விஜயகுமார், அபிராமி வெங்கடாச்சலம், மதுமிதா, சாக்ஷி அகர்வால், சரவணன், ரேஷ்மா பசுபுலேட்டி, மோகன் வைத்தியா, பாத்திமா பாபு என்று 15 போட்டியாளர்களை வைத்து தொடங்கிய இந்நிகழ்ச்சில் 16வது போட்டியாளராக மீரா மிதுன் 2வது நாள் இணைந்தார். அதன் பின்னர் வைல்ட் கார்டு என்ட்ரியாக கஸ்தூரி உள்ளே நுழைய நிகழ்ச்சியும் சுவாரஸ்யமானது.

பல்வேறு கலை நிகழ்வுகளுடன் தொடங்கிய இறுதிப்போட்டியில் கடைசியாக ஷெரின் அதன் பின்னர் லாஸ்லியா வெளியேற்றப்பட்டனர்.

இறுதியில் முகென் ராவ் பிக்பாஸ் மூன்றாவது சீசனின் வெற்றியாளராக அறிவிக்கப்பட சாண்டி 2வது இடத்தை பெற்றுக்கொண்டார். வெற்றியாளர் முகென் ராவிற்கு வெற்றிக்கிண்ணத்துடன் 50 லட்சம் பணப்பரிசும் வழங்கப்பட்டிருந்தது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 3 போட்டியாளர்களுக்கு அவர்களின் ஆளுமையின் அடிப்படையில் பல விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

சிறந்த விளையாட்டு வீரர் (Gamechanger) கவின், தைரியம் மிக்க வீரர் (Guts and Grit) வனிதா, மிகவும் ஒழுக்கமான போட்டியாளர் (Most Disciplined Contestant) சேரன், சிறந்த நண்பர் (Best Buddy) ஷெரின் மற்றும் அனைத்திலும் சிறந்து விளங்கிய வீரர் (All Rounder) தர்ஷன்