ரஜினியின் படத்தை இயக்கவுள்ள சிவா!

rajini siva
rajini siva

ரஜினியின் அடுத்த படத்தை சிவா இயக்கவுள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் நடித்த ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ மற்றும் ‘விஸ்வாசம்’ ஆகிய படங்களை இயக்கியவர் சிவா. இதில் ‘விஸ்வாசம்’ படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. வசூல் ரீதியாக தமிழக அளவில் பெரும் சாதனை படைத்தது. இந்தப் படம் 2019ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியானது.

‘விஸ்வாசம்’ படத்தின் வெற்றிக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில் ரஜினி சிவாவிற்கு அழைப்பு விடுத்திருந்தார். அப்போது தனக்கு ஏதேனும் கதை இருக்கிறதா என்று ரஜினி கேட்டுள்ளார் .

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சிவா-ரஜினி கூட்டணியில் உருவாகும் படத்தைத் தயாரிக்கவுள்ளதை அறிவித்துள்ளது.

இது குறித்து சன் பிக்சர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘எந்திரன்’ மற்றும் ‘பேட்ட’ படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக ரஜினி – சன் பிக்சர்ஸ் கூட்டணி இணைகிறது. ரஜினியின் 168-வது படமாக உருவாகும் இந்தப் படத்தை சிவா இயக்கவுள்ளார் எனத் தெரிவித்துள்ளது.