ஹர்த்திக் பாண்ட்யாவை சந்தித்த IPL உரிமையாளர்

pandya
pandya

ஹர்திக் பாண்ட்யா சமீபத்தில் லண்டன் சென்று முதுகில் அறுவை சிகிச்சை செய்துகொண்ஐட தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறார்.

இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் அதன் உரிமையாளர் நீதா அம்பானியுடன் வியாழக்கிழமை ஹர்திக் இன்ஸ்டாகிராமில் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ஹர்திக், அவரை லண்டனில் சந்தித்து விரைவாக குணமடைய வாழ்த்தியதற்கு நன்றி தெரிவித்தார்.

“என்னை லண்டனில் சந்திக்க வந்ததற்கு மிகவும் நன்றி. உங்கள் விருப்பங்களும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளும் எனக்கு மிகவும் முக்கியமானவை. நீங்கள் எப்போதும் ஒரு உத்வேகம்,” என ஹர்திக் பாண்ட்யா பதிவு செய்துள்ளார்.