வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் புலமைப் பரிசில் பரீட்சையில் 22 மாணவர்கள் சித்தி

8
8

கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கோறளைப்பற்று கோட்டக் கல்வி அலுவலகத்தின் கீழ் அமைந்துள்ள வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் அண்மையில் வெளியிடப்பட்ட புலமைப் பரிசில் பரீட்சையில் 22 மாணவர்கள் சித்திபெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளதாக கல்லூரியின் முதல்வர் அ.ஜெயஜீவன் தெரிவித்தார்.

வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் இம்முறை இருபத்திரண்டு மாணவர்கள் 152 வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று இந்த சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளதுடன், 70 புள்ளிகளுக்கு மேல் 83.2 விகிதமான மாணவர்கள் பெற்றுள்ளனர்.

அத்தோடு 100 புள்ளிகளுக்கு மேல் 68.1 விகிதமான மாணவர்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இவ் வெற்றிக்காக உழைத்த ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரையும் பாராட்டுவதாக முதல்வர் மேலும் தெரிவித்தார்.

அந்தவகையில்

  1. செல்வி.சசிகாந் திலுக்சா 185 புள்ளிகள்
  2. செல்வன்.லோபனராஜ் சதுர்சன் 184 புள்ளிகள்
  3. செல்வன்.மைக்கல் இனோஜ்செலர் 183 புள்ளிகள்
  4. செல்வி.சீதாராம் ருக்சனா 177 புள்ளிகள்
  5. செல்வி.தியாகேசன் நம்திக்கா 174 புள்ளிகள்
  6. செல்வன்.வரதராஜன் அஜனிதன் 167 புள்ளிகள்
  7. செல்வி.யோகராசா ரக்சனா 164 புள்ளிகள்
  8. செல்வன்.கமலவாசன் கனிஸ்வர் 164 புள்ளிகள்
  9. செல்வி.ஜெயகாந்தராசா அருளினி 164 புள்ளிகள்
  10. செல்வி.அற்புதராஜா அஸ்விகா 164 புள்ளிகள்
  11. செல்வன்.ஸ்ரீஸ்காந்தன் அஸ்விகன் 162 புள்ளிகள்
  12. செல்வி.ரவீந்திரகுமார் லுக்சயா 162 புள்ளிகள்
  13. செல்வன்.லக்ஸ்மணகாந்தன் இப்சான்சடெக் 161 புள்ளிகள்
  14. செல்வன்.விதானகே ரெனுஸ்கரன் 160 புள்ளிகள்
  15. செல்வன்.தமேந்திரன் கவிலாஸ் 160 புள்ளிகள்
  16. செல்வன்.ஜோன்சன் டொரிஸ் சனோவா 156 புள்ளிகள்
  17. செல்வன்.பாலகிஸ்ணன் சான்சயன் 156 புள்ளிகள்
  18. செல்வன்.உதயகுமார் சஞ்ஜேஸ் 155 புள்ளிகள்
  19. செல்வி.சுகதீசன் அனிஸ்கா 154 புள்ளிகள்
  20. செல்வி.விக்டர் ஜெயரூபன் அனா விக்டோரியா 156 புள்ளிகள்
  21. செல்வி.ரகுபதி தேப்திக்கா 152 புள்ளிகள்
  22. செல்வி.புனிதராஜ் அசானி 152 புள்ளிகளை

பெற்றுள்ளதாக கல்லூரியின் முதல்வர் மேலும் அ.ஜெயஜீவன் தெரிவித்தார்.