இதயம் பலம் பெறுவதற்கு சுலபமான இயற்கை வைத்தியம்… அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்…!

heart disease 1575536394

நன்றாகப் பழுத்த நெல்லிக் கனியில் ஒன்றை தினசரி தின்றுவிட்டு, தேக்கரண்டி அளவு தேனையும் சாப்பிட வேண்டும். தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் இருதயம் பலம் பெறும், நல்ல இரத்தம் உண்டாகும்.

இருதய படபடப்பு குறைய:மாசிக்காயைப் பால் விட்டு உரைத்து காலை மாலை இரு வேளையும் ஒன்று அல்லது இரண்டு குன்றி மணி அளவில் நாவிற் தடவி சுவைத்து வர இருதய பட படப்புத் தீரும்.

இதயம் படபடப்பு தீர:-தினசரி ஒவ்வொரு பேரிக்காயை தின்று வர இதய பட படப்புத் தீரும்.

இதய நோய்கள் தீர:-துளசி இலைச்சாறு,தேன் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து வெந்நீரில் கலந்து காலை மாலை48 நாட்கள் சாப்பிட்டு வர இதய நோய்கள் அனைத்தும் நீங்கும்.

இதயத்தில் குத்து வலி தீர:-கருந்துளசி,செம்பருத்திப் பூ ஆகியனவற்றை சேர்த்துக் கசாயம் செய்து காலை மாலை 10 நாட்கள் குடித்து வர இதய வலி குத்து ஆகியவை தீரும்.

இதய பலகீனம் தீர:-தினசரி ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு வர இதய நோய்கள் தீரும்.