கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள்

keerthy suresh
keerthy suresh

கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது 23வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இந்திய திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் மலையாள திரையுலகில் 2000 ஆண்டில் பைலட்ஸ், 2001ல் அச்சனே எனக்கு இஷ்டம், 2002ல் குபேரன் ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

அக்டோபர் 17, 1992ம் ஆண்டு சென்னையில் கீர்த்தி சுரேஷ் பிறந்தார்.

2013ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்னும் மலையாள திரைப்படத்தில் நாயகியாக நடித்து திரையுலகில் நடிகையாக மீண்டும்
நடிக்க தொடங்கினார்.

2015ம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷிற்கு, 2016ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் மாபெரும் வெற்றியை தேடித் தந்தது.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என தனது 23 வயது பிறந்த நாளை கொண்டாடும் வேளையில் 24வது படத்தின் அறிவிப்புக்காக காத்திருக்கிறார்.