ஆப்கானிஸ்தான் தொடருக்கான மே. தீவுகள் அணி விபரம் அறிவிப்பு

w.indies
w.indies

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20I தொடர்களுக்கான அணி விபரத்தினை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளின் ஒருநாள் மற்றும் T20I அணிகளுக்கான புதிய தலைவராக கீரன் பொல்லார்ட் செயற்படவுள்ளதுடன், டெஸ்ட் அணியின் தலைவராக ஜேசன் ஹோல்டர் தொடர்ந்தும் செயற்படவுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடர் அடுத்த மாதம் இந்தியாவில் உள்ள தேராதூனில் நடைபெறவுள்ளது.

முதலில் T20I போட்டிகள் 5ஆம், 7ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

மூன்று ஒருநாள் போட்டிகள் 13ஆம், 16ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

இறுதியாக, ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 27ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

T20I அணி விபரம்

கீரன் பொல்லாரட் (தலைவர்), நிக்கோலஸ் பூரன், எவின் லிவிஸ், பிரெண்டன் கிங், ஷிம்ரொன் ஹெட்மையர், செர்பென் ரதபோர்ட், ஜேசன் ஹோல்டர், பெபியன் எலன், ஹெய்டன் வோல்ஸ் ஜே.ஆர்., கெரி பீரி, செல்டன் கொட்ரெல், தினேஷ் ராம்தீன், கெஸ்ரிக்ஸ் வில்லியம்ஸ், அல்ஷாரி ஜோசப்

ஒருநாள் அணி விபரம்

கீரன் பொல்லாரட் (தலைவர்), ஷேய் ஹோப், ஷிம்ரோன் ஹெட்மையர், சுனில் எம்ரிஸ், நிக்கோலஸ் பூரன், பிரெண்டன் கிங், ரொஸ்டன் சேஸ், ஜேசன் ஹொல்டர், ஹெய்டன் வோல்ஸ் ஜே.ஆர்., கெரி பீரி, ஷெல்டன் கொட்ரல், கீமோ போல், ரொமேரியோ செபர்ட், அல்ஷாரி ஜோசப்

டெஸ்ட் குழாம்

ஜேசன் ஹோல்டர் (தலைவர்), ஜோன் கெம்பல், க்ரைக் ப்ராத்வைட், ஷிம்ரொன் ஹெட்மையர், செமர் ப்ரூக்ஸ், ரொஸ்டன் சேஸ், சுனில் எம்ரிஸ், ஜோமல் வொரிகன், ரகீம் கொர்வெல், கெமார் ரோச், கீமோ போல், அல்ஷாரி ஜோசப்