பெண்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் கருப்பை புற்றுநோய் என்று அர்த்தம்!

201905141335025672 ovarian cancer symptoms SECVPF
201905141335025672 ovarian cancer symptoms SECVPF

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்குக் கருப்பை புற்றுநோய் ஏற்படும்.

ஆனால் இன்று கருத்தடை முறைகள், மாதவிலக்கின் போது சுகாதாரமின்மை மற்றும் கிருமித் தொற்று போன்ற காரணங்களால் கருப்பை வாய் மற்றும் கருப்பை புற்றுநோய்க்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

தற்போது கருப்பை புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள் என்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்

மாதவிடாய் நின்றபிறகும் ரத்தப்போக்கு ஏற்பட்டால் உங்கள் மருத்துவருடன் ஆலோசித்து சரியான காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
இளஞ்சிவப்பு, வெள்ளை அல்லது சிவப்புநிற வெளியேற்றம் இந்த நோய்க்கான அறிகுறியாகும்.

சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படுவது சிலநேரம் கருப்பை புற்றுநோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம். நிறைய தண்ணீர் குடிப்பதால் இது குறையக்கூடும்.

சில பெண்கள் நெருக்கமாக இருக்கும் போது வலியை அனுபவிக்கின்றனர். கருப்பை புற்றுநோய் காரணமாகவும் அந்த வலி ஏற்படும். கருப்பையில் கட்டி ஏதாவது இருப்பதும் இந்த வலிக்குக் காரணமாக இருக்கலாம்.