வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்..!

1 12

வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்:

  • வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப்பிட்டால் வாய் புண் மற்றும் கண்வலி குணமாகும். காரணம் வெங்காயத்தில் அதிகளவு உள்ள ரிபோபிளவின் என்னும் பி குருப் வைட்டமின் ஆகும்.
  • சிறிய வெங்காயமோ அல்லது பெரிய வெங்காயமோ இரண்டும் ஒரே மாதிரியான மருத்துவ குணத்தை அளிக்கும் தன்மை வாய்ந்தது.
  • வெங்காயத்தை வதக்கியோ அல்லது வேகவைத்தோ எப்படி வேண்டும் என்றாலும் சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதால் வெங்காயத்தில் உள்ள நறுமணம், சுவை மற்றம் மருத்துவ குணம் முழுமையாக கிடைக்கிறது.
  • சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் தினமும் பச்சை வெங்காயம் சாப்பிட்டால் சிறுநீரக பிரச்சனை குணமாகும்.
  • இரத்தம் விருத்தியாக தினமும் பச்சை வெங்காயம் சாப்பிட வேண்டும்.
  • செரிமானம் அடைய தினமும் வெங்காயத்தை பச்சையாகவோ, சமைத்தோ அல்லது மற்ற உணவுகளுடன் கலந்தோ சாப்பிட்டால் செரிமானம் பிரச்சனைகள் குணமாகும்.
  • காய்ச்சல், சிறுநீரக கோளாறு, இருமல் போன்றவை குணமாக பெரிய வெங்காயம் ஒன்றை மிக்ஸியில் அரைத்து இரசமாக வைத்து அருந்தினால் குணமாகும்.
  • வெங்காயம் உடலுக்கு குளிர்சி அளிக்கும் மருந்து என்பதால் அளவுடன் தான் சாப்பிட வேண்டும்.
  • உடல் ஆரோக்கியத்துடன் இருக்க 100 கிராம் வெங்காயத்தை தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • குளிர்காய்ச்சல் உள்ளவர்கள் வெங்காயத்துடன் மிளகையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.வெங்காயம்
நெஞ்சு வலிக்கு

நெஞ்சு வலி காரணமாக இதயப்பையில் சுவர்தசைக்கு உருதி தரும் நாடி நாளன்களில் இரத்தம் உறைவு ஏற்படுவதால் நெஞ்சு வலிக்கும் அப்போது வெங்காயத்தை சாப்பிட்டால், இரத்தம் உறைவதை அகற்றப்பட்டு இதயத்திற்கு நாளன்கள் வழியாக இரத்தம் செல்லும், நெஞ்சு வலி பிரச்சனைகள் குணமாகும். இதய நோயளிகள், இரத்த அழுத்த நோயாளிகள், கொலஸ்ட்ரால் குறைய தினமும் வெங்காயத்தை பச்சையாக 100 கிராம் சாப்பிட வேண்டும்.

புகை பிடிப்பவர்கள் குணம் பெற:

புகை பிடிப்பவர்கள் தினமும் அரை டீஸ்பூன் வெங்காயம் சாறு நான்கு வேளை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் பலம் பெறும். இதை போன்று வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு வாந்தால் இருமல், இரத்த வாந்தி, ஜலதோசம் மற்றும் சளி போன்றவை பூரணமாக குணமாகும்.

குளிர்கால ஜலதோசம் குணமாக:

பொதுவாக குளிர்காலத்தில் அனைவருக்கும் ஜலதோசம், இருமல், காய்ச்சல், நெஞ்சி சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படும், இந்த பிரச்சனை குணமாக சமளவு வெங்காயம் மற்றும் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.  இவ்வாறு சாப்பிடுவதால் குளிர்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குணமாகும்.

வெங்காயத்தில் உள்ள ஊட்டச்சத்துகள்:

100 கிராம் வெங்காயத்தில் ஈரப்பதம் 82%, புரதம் 1.2%, கார்போஹைடிரேட் 11.1%, மீதியில் கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து முதலியவையும் உள்ளன. 47 மில்லி கிராம் கால்சியமும், 50 மில்லி கிராம் பாஸ்பரஸ், 0.7 மில்லி கிராம் இரும்பு சத்தும், வைட்டமி ன் ‘பி’, வைட்டமின் ‘சி’. கிடைக்கும் கலோரி  முதலியன சிறிதளவும் உண்டு.

பச்சை வெங்காயம் பயன்கள்:- 

  • வெங்காயத்தில் உள்ள இரும்பு சத்து உடலில் எளிதாக கலந்து விடுகிறது.
  • இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் வெங்காயத்தை சாப்பிட்டால் இரத்த சோகை பிரச்சனைகள் குணமாகும்.
  • வெங்காயத்தை தினமும் சாப்பிட்டால் தலைவலி, முழங்கால் வலி, பார்வை மங்குதல் போன்றவை குணமாகும்.
  • சளி பிரச்சனை உள்ளவர்கள் தினமும் வெங்காயம் சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை நீங்கும்.
  • வெட்டு காயம் உள்ள இடத்தில் வெங்காயத்தை வதக்கி ஒரு துண்டுகள் காயத்தில் வைத்து வந்தால் காயங்கள் விரைவில் குணமாகும்.