மஞ்சளில் உள்ள மங்காத நன்மைகள்!

turmeric 1
turmeric 1

நாம் சமைக்கும் போது நம் வைக்க கூடிய சமையல் ருசியாக இருக்க வேண்டும் என்று நினைப்பது மட்டுமல்லாமல் அது பார்ப்பதற்கும் அழகாக இருக்க வேண்டும் என்று ஒருசிலர் நினைப்பார்கள்.

அப்படி அழகு தரக்கூடிய சமையல் பொருளில் ஒன்றாக விளங்குவது மஞ்சள்தான்.

மஞ்சளில் காணப்படும் மிக முக்கியமான பொருள் குர்குமின். குர்குமின் வீக்கம் போன்ற உடல் குறைபாடுகளை போக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவி செய்யும்.

மஞ்சளில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை புற்றுநோய், நீரிழிவு நோய்க்கான சிகிச்சை, கல்லீரலின் ஆரோக்கியம் மற்றும் மற்ற வியாதிகளை எதிர்த்து போராட உதவி செய்யும்.

மஞ்சளின் நன்மைகள் குறித்து இப்போது பார்ப்போம்

மஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினியாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.நம் உடலை நோய்களில் இருந்து பாதுகாத்து, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவி செய்யும்.

மேலும் இது நம் உடலை தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

மஞ்சளில் நிறைந்திருக்கும் ஆன்டி-செப்டிக் தன்மை நம் உடலை கிருமிகள் தொடாத வண்ணம் பாதுகாக்கும்.

மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால் தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கிறது.

புற்றுநோய் செல்களை தடுக்கும். கீமோதெரப்பியால் உண்டாகும் பக்க விளைவுகளையும் குறைக்கிறது.

மஞ்சள் கல்லீரலை சுத்தப்படுத்தி, அதில் ஏற்படும் வியாதிகளை விரட்டும் தன்மை உள்ளது.

நீரிழிவு நரம்பியல் தொடர்பான பிரச்சனையை தடுக்கும்.

மஞ்சள் செரிமான நோய்க்குறைபாடுகளுக்கும் சிகிச்சை அளிக்கும். இரைப்பையில் ஏற்படும் அல்சர் நோய்க்குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்க குர்குமின் உதவி செய்யும்.