மலச்சிக்கலில் இருந்து விடுபட இந்த பழத்தை சாப்பிடுங்கள்!

7c7b50d3bf07870019a686d4bbb8c61f
7c7b50d3bf07870019a686d4bbb8c61f

பொதுவாக ஒருவர் அன்றாடம் மலம் கழித்தால் தான் உடல் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம்.

வாரத்திற்கு 3 முறை கழிப்பவர்கள் அல்லது மலம் மிகவும் இறுக்கமானால், உடலின் செரிமான மண்டலம் மோசமான நிலையில் உள்ளது என்று கூறப்படும்.

இதிலிருந்து எளிய முறையில் விடுபடவேண்டுமாயின் அந்தக்காலத்தில் நமது முன்னோர்கள் மலச்சிக்கலுக்கு பயன்படுத்தி வந்த அத்திப்பழத்தினை சாப்பிடுவதே சிறந்தது.

ஏனெனில் உலர்ந்த அத்திப்பழத்தை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், மலச்சிக்கலில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

அந்தவகையில் தற்போது உலர்ந்த அத்திப்பழ நீரை எப்படி குடிக்கலாம்? இதன் நன்மைகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

முதலில் 2-3 உலர்ந்த அத்திப்பழத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

அல்லது குறைந்தது 4-5 மணிநேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதை மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

முக்கியமாக ஒரு நாளைக்கு 2-3 உலர்ந்த அத்திப்பழத்திற்கு மேல் சாப்பிட வேண்டாம். இல்லாவிட்டால், வயிற்று பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

அத்திப்பழம் ஊற வைத்த நீரை எதற்கு குடிக்க வேண்டுமெனில், அதில் தான் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது.

இந்நீரைக் குடிக்கும் போது, அந்த நார்ச்சத்து எளிதில் உடலுக்கு கிடைத்து, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.