ஒக்டோபர் 25 இல் பிகில் வெளியீடு

bigil
bigil

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பிகில்’ படத்தினை வெளியிடும் திகதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருகின்றமையினால் அதற்கு முன்பே 24 அல்லது 25ம் தேதி வெளியாகும் என்று செய்திகள் வெளியாகியது.

தற்போது ஒக்டோபர் 25ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.