கண்திருஷ்டிக்கான அறிகுறிகளும் பரிகாரமும்

625.200.560.350.160.300.053.800.300.160.90
625.200.560.350.160.300.053.800.300.160.90

கல்லடி பட்டாலும் கண் அடி படக்கூடாது “என்ற பழமொழி உண்டு.உங்கள் வீட்டில் இந்த அறிகுறிகள் இருந்தால் கண்திருஷ்டி இருப்பதை நீங்கள் அறியலாம்.

நீங்கள் வீட்டில் எந்த வேலை செய்யவில்லை என்றாலும் உடல் அசதியாக இருக்கும். எந்தவொரு வேலையையும் முழு ஈடுபாட்டுடன் செய்யமாட்டோம்.

அடிக்கடி கொட்டாவி வரும்.புதிய ஆடை அணியும்போது அது கிழிந்தாலோ அல்லது தீக்காயம் பட்டாலோ இது கண்திருஷ்டிக்கான அறிகுறிகளே ஆகும்.

மனம் அமைதியாக இல்லாமல் மனக்குழப்பம் ஏற்படும். கெட்ட கனவுகள் ,தூக்கமின்மை ,அடிக்கடி மருத்துவ செலவுகள் ஏற்படுவது போன்றவையும் கண்திருஷ்டிக்கான அறிகுறிகள்

பரிகாரம்

மலர்கள்- வாசலில் அல்லது வீட்டிற்கு வருகிறவர்களின் கண் படும்படியான இடத்தில் பெரிய பாத்திரத்தில் பூக்களை மிதக்க வைக்கலாம். பூக்களுக்கு திருஷ்டியை கிரகத்துக் கொள்ளும் ஆற்றல் உள்ளது.

வீட்டு வாசலில் செடிகள் வைக்கிறவர்கள் வெறும் அலங்காரச் செடிகளை வைக்காமல் ஒரு ரோஜா செடியாவது வைக்க வேண்டும். ஏனென்றால் ரோஜா செடியில் முட்கள் இருக்கும். முள் செடிகள் திருஷ்டியை போக்கிடும்.

வாழை -ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவதற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது நல்லது. சிலர் பூசணிக்காய்,அகோரமான பொம்மை என தொங்க விடுவார்கள். இவை எல்லாவற்றையும் விட இயற்கைத் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.

வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் வாழையை நடுங்கள் ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்போதே களைந்துவிடும் அருங்குணம் உண்டு. அதை வைத்தால் இன்னும் நல்லது.

மீன் தொட்டி- -இது வீடு, அலுவலகம் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வருகிறவர்களின் பார்வையை திசை திருப்பும் பொருட்டு மீன் தொட்டியை வைக்கலாம்.

உப்பு -குளிக்கும் போது அந்த நீரில் உப்பு சேர்த்து குளித்தால் கண் திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி,சோம்பல்,அலர்ஜி எதாவது ஏற்ப்பட்டால் நீங்கிடும். இதனை வாரம் ஒரு முறை செய்யலாம். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமைகள் அல்லது செவ்வாய் கிழமைகளில் இப்படிக் குளிக்கலாம்.

செப்புக் காசு-குழந்தைகளின் உடல் மெலிந்து கொண்டே இருந்தாலும் அல்லது பயத்தில் அவ்வப்போது அழுது கொண்டு இருந்தாலும், செப்பு காசை கையில் கட்டினால் துஷ்ட சக்திகளும், பொறாமைக்காரர்களின் கண்திருஷ்டியும் அண்டாது.

சில குழந்தைக்கு கையில் செப்பு காசு கட்டினால் அலர்ஜி ஏற்படலாம். அதற்கு குழந்தைகளின் கையில் காசை கட்டும் முன், வெள்ளை துணியை மஞ்சள் கரைத்த தண்ணீரில் நனைத்து அந்த மஞ்சள் துணியில் செம்பு காசை சுற்றி பிறகு குழந்தையின் கையில் கட்டினால் அலர்ஜி ஆகாது.

குழந்தைகைக்குழந்தைகளுக்கு கண் திருஷ்டி பட்டால் சரியாக உணவு சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு ஒருகைப்பிடி உப்பை எடுத்து,தாய் மடியில் குழந்தையை வைத்து இடமிருந்து வலமா மூன்று முறையும் வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்றி அப்படியே குழந்தையின் அம்மாவுக்கும் சுற்றி அந்த உப்பை தண்ணியில போட்டிட வேண்டும்.