ஹீரோ படத்தின் செகண்ட் லுக்

hero
hero

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ’ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் தற்போது இரும்புத்திரை பட இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். இரும்புத்திரை போலவே அதிரடி ஆக்சன் படமாக இது உருவாகி வருகிறது. அப்படத்தில் நடித்த அர்ஜூன் இதிலும் நடிக்கிறார். கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.

அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் செகண்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஹீரோ செகண்ட் லுக்