சங்கத்தமிழன் படத்தின் வெளியீடு அறிவிப்பு

sangathamilan
sangathamilan

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சங்கத்தமிழன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதி இரு வேடங்களில் நடித்துள்ளார்.

சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராசி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்கள். மேலும் நாசர், சூரி, ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லிப்ரா புரடொக்க்ஷன்ஸ் இப்படத்தை வெளியிடுகிறது.

இப்படம் தீபாவளி முன்பே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் தீபாவளி அன்று வெளியாகும் என்றும் அறிவித்திருந்தார்கள். தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரடெக்க்ஷன்ஸ் நவம்பர் 15ம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

தீபாவளி தினத்தன்று திரையரங்கு கிடைக்காத காரணத்தினால் படத்தின் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் படம் நவம்பர் 8 முதல் 15ம் தேதிக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

சங்கத்தமிழின் படத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருந்த விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு இது பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.