2 நாயகிகளுடன் நடிக்கும் சந்தானம்

santhanam
santhanam

சந்தானம் நாயகனான நடித்து வருகின்ற பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் இரு நாயகிகள் சந்தானத்திற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்படத்தில் சந்தானம் ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி நடிக்கிறார். சமீபத்தில் வெளியான A1 வெற்றிப்படத்தில் கதாநாயகியாக நடித்த இவர், மீண்டும் சந்தானத்துடன் இரண்டாம் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்.

இன்னொரு நாயகியாக சுவாதி முப்பலா அறிமுகம் ஆகிறார். இவர் மிஸ் கர்நாடகா 2017 அழகி பட்டம் வென்றவர். இவர்களுடன் ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், பரத் ரெட்டி, சிவசங்கர் மாஸ்டர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

பெப்ரவரி மாதத்தில் படத்தினை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.