‘சூரரைப் போற்று’ பர்ஸ்ட் லுக் நவம்பர் 10ம் திகதி வெளியீடு

soorarai pottru
soorarai pottru

காப்பான் படத்திற்குப் பிறகு சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’.

இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

மேலும், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து பின்னணி வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நவம்பர் 10ம் திகதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.