பிகிலின் 100 கோடி வசூல் சாதனை!

pikil 00 1
pikil 00 1

விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘பிகில்’. அட்லீ இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்துள்ளார். மேலும் அப்பா – மகன் என்று இரண்டு தோற்றங்களிலும் விஜய் நடித்திருக்கிறார்.

உலகம் முழுவதும் வெளியான இப்படம் 2 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததில் இது விஜய்யின் 7வது படமாகும்.

இதுவரை தீபாவளி தினத்தில் வெளியான துப்பாக்கி, கத்தி, மெர்சல், சர்கார், தற்போது வெளியான பிகில் ஆகிய படங்கள் அனைத்தும் 100 கோடி வசூல் சாதனையை புரிந்துள்ளது.