நவம்பரில் வெளியாகும் ‘ஆக்‌ஷன்’

action 1
action 1

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ‘ஆக்‌ஷன்’. துருக்கியில் பெரும் பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, யோகி பாபு போன்றோர் நடித்துள்ளார்கள்.

இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி அதிகம் பேசப்பட்ட நிலையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது என்று டிரைலரில் அறிவிக்கப்பட்டுள்ளது.