கார் விபத்தில் நடிகர் மனோ மரணம்

mano 1
mano 1

‘புழல்’ படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக அறிமுகமானவர் மனோ (வயது 37). தனியார் தொலைக்காட்சியில் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் நடனமாடுபவராக பிரபலமானவர். மேலும் பல படங்களிலும் நடித்து உள்ளார். மேடை நிகழ்ச்சிகளும் நடத்தி வந்தார்.

நண்பர் வீட்டுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த வேளையில் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த நடிகர் மனோ சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அவரது மனைவி லிவியா பலத்த காயம் அடைந்தார்.

படுகாயம் அடைந்த லிவியாவுக்கு தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போக்குவரத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.