‘தெறி’ ரீமேக்கில் ஸ்ருதிஹாசன்

sruthi
sruthi

விஜய்யை வைத்து அட்லி முதன்முதலாக 2016ஆம் ஆண்டில் தெறி படத்தினை இயக்கியிருந்தார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த இந்த படம் 175 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்தனர்.

இந்த படம், தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு அப்போது வெளியானது. இருந்தாலும், தெலுங்கில் இந்த படத்தை ரீமேக் செய்ய ஏகப்பட்ட போட்டி நிலவியது. விஜய் கதாபாத்திரத்தில் ரவி தேஜா நடிக்கப் போவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழில் எமி ஜாக்சன் நடித்த கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கலாம் என தெரிகிறது. இன்னொரு ஹீரோயின் யார் என தெரியவில்லை. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.