நவம்பரில் வெளியாகும் ‘தனுசு ராசி நேயர்களே’

karis kalyan
karis kalyan

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தனுசு ராசி நேயர்களே’. இந்த படத்தை இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார்.

ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இந்த படம் காதல் மற்றும் நகைச்சுவை கலந்த கதையாக உருவாகிறது.

இதில் ரெபா மோனிகா ஜான், ரியா சக்கரவர்த்தி ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இப்படம் நவம்பர் மாதம் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.