T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி

sl 1
sl 1

2020 ஆம் ஆண்டு சர்வதேச இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் A குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ள இலங்கை அணி, அயர்லாந்து அணியுடன் மோதுகின்றது.

உலகக் கிண்ணத் தொடரில் மொத்தம் 16 அணிகள் கலந்துகொள்ளவுள்ளன. T20I தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ள பாகிஸ்தான், இந்தியா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள், ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.

தகுதிச் சுற்றின் மூலம் அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து, ஓமான், பபுவா நியூகினியா மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ளது.