மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

fish
fish

ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான பிராந்தியங்கள் மற்றும் காங்கேசன்துறை, முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பிரதேசங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 60-65 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இந்த வானிலை நாளை (02) காலை வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பிலான முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
குறித்த கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன் கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.