எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச விடுத்துள்ள எச்சரிக்கை

8738d550 1ae4 4afa 86f6 461fcd84915e
8738d550 1ae4 4afa 86f6 461fcd84915e

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சந்திரிக்கா இணைந்து செயற்படுவது எங்களுக்கு பாதகமான நிலையை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு மஹிந்த அறிவுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – பொதுஜன பெரமுனவுடன் இணைவது தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும் சந்திரிக்கா சுதந்திர கட்சியின் பலமாக இருப்பது தங்களுக்கு ஆபத்தாக உள்ளது. சந்திரிக்காவுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு அவரை குழப்பி விட வேண்டாம் என மஹிந்த ஆலோசனை வழங்கியுள்ளார்.
தவறான நேரத்தில் அவர் அங்கு வந்து விட்டார். அந்த பெண்ணை ஒரு போதும் நம்ப முடியாது. எங்கள் மீது எப்படியும் கோபமாக தான் இருப்பார். எனவே அவதானமாக செயற்படுங்கள்.
இது மூளையுடன் செயற்பட வேண்டிய நேரம். பசிலும், சந்திரிக்கா குறித்து தேவையற்ற கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அவ்வாறான கருத்துக்கள் வெளியிட வேண்டாம். முடிந்தால் சந்திரிக்கா – மைத்திரியை பிரித்து விடுங்கள் என மஹிந்த ஆலோசனை வழங்கியுள்ளார்.
கடந்த சில தினங்களாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு திடீரென விஜயம் மேற்கொண்ட சந்திரிக்கா பல்வேறு பேச்சவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.