குறைந்த ஆபத்துள்ள நாடுகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட விதியை இரத்து செய்தது பிரித்தானியா!

large mc5ladOeH R Y bLKyOUFQ0sSXqoQtd9p9SfpzT7GZs
large mc5ladOeH R Y bLKyOUFQ0sSXqoQtd9p9SfpzT7GZs

‘குறைந்த ஆபத்து’ என்று கருதப்படும் பல நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட விதியை இரத்து செய்வதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதில் கொவிட்-19 தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்திய பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மனி மற்றும் இத்தாலி உள்ளிட்ட பல நாடுகள் உள்ளடங்குகின்றன.

இந்த மாற்றம் எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது. விலக்கு அளிக்கப்பட்ட நாடுகளின் முழு பட்டியல் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமையன்று, வெளிநாட்டு பயணங்களுக்கு எதிரான ஆலோசனையிலிருந்து அரசாங்கம் பல நாடுகளுக்கு விலக்கு அளிக்கும். அதாவது பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் மீண்டும் விடுமுறையில் வெளிநாடு செல்லலாம்.

எவ்வாறாயினும், இந்த அறிவிப்பு வெளிநாடுகளுடனான பரஸ்பர ஏற்பாடுகளுக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை. அதாவது பிரித்தானியாவில் இருந்து பயணிகள் அங்கு சென்றவுடன் சுயமாக தனிமைப்படுத்த வேண்டியிருக்கும்.

சர்வதேச பயணிகள் பிரித்தானியாவுக்குள் நுழையும் போது அவர்கள் இரண்டு வாரங்களுக்கு சுயமாக தனிமைப்படுத்த வேண்டுமென அறிவித்து ஒரு மாதத்திற்குப் பிறகு, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் (Grant Shapps) கூறுகையில், ‘இந்த மாற்றங்கள் பிரித்தானிய மக்களுக்கு ஒரு நல்ல செய்தி மற்றும் பிரித்தானிய வணிகங்களுக்கு ஒரு சிறந்த செய்தி.

நாங்கள் மீண்டும் இணைக்கும் நாடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை அரசாங்கம் மீண்டும் விதிக்க முடியும்’ என கூறினார்.

மேலும், அறிவிக்கப்பட்ட மாற்றங்கள் இங்கிலாந்துக்கு மட்டுமே பொருந்தும். ஏனெனில் பிரித்தானியாவில் பிற பகுதிகளான ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தின் அதிகாரம் பெற்ற அரசாங்கங்கள் ‘தங்கள் சொந்த அணுகுமுறையை பின்பற்றும்’ என்று அரசாங்கம் கூறியுள்ளது.