தென் கொரியாவில் 46 நாட்கள் பெய்த கனமழையால் 30 பேர் பலி

r0 41 800 491 w1200 h678 fmax
r0 41 800 491 w1200 h678 fmax

தென் கொரியாவில் ஏழு ஆண்டுகளில் நாட்டின் மிக நீண்ட பருவமழை பதிவாகியுள்ளதால், தெற்கு பகுதியில் உள்ள சில மாகாணங்களில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

அங்கு 46 நாட்கள் பெய்த கனமழைக்குப் பின்னர் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பயங்கர நிலச்சரிவில் சிக்கி, 30பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12பேர் காணாமல் போயுள்ளனர்.

கொரிய தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் மழை பெய்ததால், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 6,000பேர் வெளியேற்றப்பட்டதாக அந்த நாட்டின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.