மிதக்கும் சந்தை தொடர்பில் பிரதமர் உத்தரவு !

6 fd 1
6 fd 1

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் உள்ள மிதக்கும் சந்தைத் தொகுதியை விரைவில் மறுசீரமைக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார்.

103 வர்த்தகக் கடைத் தொகுதிகளைக் கொண்ட இந்த மிதக்கும் சந்தை,சுமார் 312 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது

கடந்த அரசாங்க காலத்தில் இந்த கடைத் தொகுதி பராமரிக்கப்படாமலிருந்தமை குறிப்பிடத்தக்க விடயங்களில் ஒன்றாகும் . இதனை கவனத்திற் கொண்ட பிரதமர், இதுதொடர்பில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் பணிப்புரையை விடுத்துள்ளார்.

பராமரிப்பு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளனநிலையிலும் மெருகூட்டல் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான விடயங்களை நிவர்த்தி செய்யும் வகையில் இது மறுசீரமைக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.