உறுப்புரிமையிலிருந்து நீக்கியது சட்டவிரோ தமானது -பௌசி

5 pp
5 pp

தன்னை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கியதை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு தெரிவித்து, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில் சுதந்திரக் கட்சித் தலைவர் மைத்திரிபால சிரிசேன,செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஐ.ம.சு.மு செயலாளர் மஹிந்த அமரவீர, சு.க ஒழுக்காற்று குழு உறுப்பினர்கள், தேர்தல் ஆணைக்குழு, பாராளுமன்ற செயலாளர் நாயகம் உட்பட 13 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தான் சுதந்திரக்கட்சி அங்கத்தவராக இருப்பதாகவும் ஆனால் தன்னை கட்சி உறுப்புரிமையில் இருந்து சட்டவிரோதமாக நீக்கியுள்ளதாகவும் இது சட்டவிரோதமானது என அறிவிக்குமாறும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கை 2 மாதங்களுக்குள் விசாரித்து முடிவு அறிவிக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தேசியப்பட்டியலினூடாக பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். கடந்த வருடம் 52 நாள் ஆட்சி மாற்றத்தின் போது இவர் ஐ.தே.க தரப்புக்கு ஆதரவு வழங்கியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.