சூரிய கிரகண தினத்தில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வழக்கம்போல் திறப்பு

kalakasthi
kalakasthi

சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் நடை வழக்கம்போல் திறந்திருக்கும் என கோவில் நிருவாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்தால் பக்தர்களுக்கு அனைத்துத் தோஷங்களும் நீங்கும். சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில் நாட்டில் உள்ள அனைத்துக் கோவில்களும் நடை சாத்தப்பட்டு இருக்கும்.

ஆனால், அதற்கு நேர்மாறாகச் சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழும் நேரத்தில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வழக்கம்போல் நடை திறந்திருக்கும். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இது தான் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலின் சிறப்பம்சமாகும் என தெரிவித்துள்ளது.