சற்று முன்
Home / செய்திக்குரல் / வடகிழக்கு / எம்.ஜி.இராமசந்திரனின் 103வது பிறந்த தின கொண்டாட்டம் யாழில் !

எம்.ஜி.இராமசந்திரனின் 103வது பிறந்த தின கொண்டாட்டம் யாழில் !

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் 103வது பிறந்த தினம் இன்று (18) யாழில் அனுட்டிக்கப்பட்டது.

எம்.ஜி.இராமசந்திரனின் தீவிர இரசிகனும் நண்பருமான யாழ்.எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் சுந்தரலிங்கதின் ஏற்பாட்டில் பிறந்ததின நிகழ்வுகள் இடம்பெற்றன.

யாழ்.கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு கோப்பாய் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து தீபம் காட்டி அஞ்சலி செலுத்தி பிறந்த தினத்தினை நினைவு கூர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வலி-கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் ராசேந்திரம் செல்வராஜா, மற்றும் யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் குடும்பத்தினர் கலந்து கொண்டு எம்.ஜி.இராமச்சந்திரனுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இந் நிகழ்வில் எம்.ஜி.ஆரின் இரசிகர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் இறுதியில் கோப்பாய் சுந்தரலிங்கம் தனது சொந்த நிதியில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்ததுடன் இனிப்பு பண்டங்களையும் பரிமாறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

தொல்லியல் திணைக்களங்களின் பிடியில் ;முல்லையில் 26 ஆயிரத்து 507 ஏக்கர் நிலம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் , வனஜீவராசிகள் திணைக்களங்களம் , மகாவலி அதிகாரசபை மற்றும் தொல்லியல் ...