கொரோனா வைரசினால் கடுமையான ஆபத்து – பிரிட்டன்

images 2 1
images 2 1

கொரோனா வைரசினால் பொது சுகாதாரத்திற்கு கடுமையான மற்றும் உடனடி ஆபத்து உருவாகியுள்ளது என பிரிட்டன் அறிவித்துள்ளது.

பிரிட்டனின் சுகாதார அமைச்சு இதனை அறிவித்துள்ளதுடன் கொரோனோ வைரஸ் மேலும் பரவுவதை தடுப்பதற்காக புதிய நடைமுறைகளை வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தனிநபர்களை அவர்களின் பாதுகாப்பிற்காக தனிமைப்படுத்துவதற்கு நாங்கள் எங்கள் விதிமுறைகளை இறுக்கமானதாக்குகின்றோம்.

சுகாதார துறையினர் குறிப்பிட்ட நபர் ஒருவரால் ஏனையவர்களிற்கு வைரஸ் பரவலாம் என கருதினால் அந்த நபரை தனிமைப்படுத்தலாம்.

லிவர்பூலில் உள்ள அரோபார்க் வைத்தியசாலை,ஹென்ட் ஹில் பார்க்கில் வைத்தியாசலை ஆகியவற்றை நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்கான இடங்களாக பிரிட்டனின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.