நெல் கொள்வனவு செய்வதற்காக நடமாடும் சேவைகள்

8 sehan 2
8 sehan 2

பெரும்போக நெல் அறுவடையையடுத்து அரசாங்கத்தின் நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டமையினால் விவசாயிகளை தனியார் வர்த்தகர்கள் சுரண்டும் நிலை தற்போது இல்லை என்று ராஜாங்க அமைச்சர்ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நடவடிக்கைகளை கண்டறிவதற்காக கடந்த 12 ஆம் திகதி தலாவ கட்டிடத்தொகுதிக்கு விஜயம் செய்த போதே ராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வரலாற்றில் முதற்தடவையாக இம்முறை ஈரத்தன்மையுடைய நெல்லை ஆகக்கூடிய விலைக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதினால் விவசாயிகள் பாரிய அளவில் நன்மையடைந்துள்ளார்கள்.

அரசாங்கத்தின் நெற்கொள்வனவு தொடர்பாக விவசாயிகள் சந்தேகத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை கிடையாது.தாமதங்கள் ஏற்படுமாயின் அதுபற்றி அரசாங்கத்திற்கு அறிவிக்குமாறு அவர் விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

தூரப்பிரதேசங்களில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக நடமாடும் சேவைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

நெற்கொள்வனவிற்கென அரசாங்கம் முதற்கட்டமாக 383 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்..