ஒலிம்பிக்கை ஓராண்டுக்கு ஒத்திவையுங்கள்- அமெரிக்க அதிபர் வேண்டுகோள்

1 4
1 4

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விளையாட்டுப் போட்டிகளில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் வீரர்கள் மிகப் பெரிய அளவில் பங்கேற்கின்றனர்.

உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்குதலால், ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்ய வேண்டும் அல்லது நிகழ்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற ஊகங்களை சர்வதேச விளையாட்டு அமைப்புகளும் நாடுகளும் கோரி வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுகுறித்து கூறுகையில், ‘‘கொரோனா வைரஸ் தாக்குதல் உலகளவில் பரவி உள்ளதால், டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியை ஒரு வருடம் தாமதப்படுத்துவது சரியாக இருக்கும்.

இதனை ஒலிம்பிக் குழு அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். இது ஒரு சிக்கலான விசயம் என்றாலும், மைதானங்களை வெற்று அரங்குகளாக வைத்திருப்பதை விட போட்டியை ஒத்திவைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று அவர் கூறினார்.