20 ஓவர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு

t20 world cup
t20 world cup

7வது 20 ஓவர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2020) ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் அவுஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான இறுதி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் சபை நேற்று வெளியிட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடைபெற்ற தகுதி சுற்றில் நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, அயர்லாந்து, நமிபியா, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் அடுத்த ஆண்டு நடக்கும் 20 ஓவர் உலகக்கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

இதன்படி ‘ஏ’ பிரிவில்

  1. இலங்கை
  2. பப்புவா நியூ கினியா
  3. அயர்லாந்து
  4. ஓமன்

‘பி’ பிரிவில்

  1. வங்காளதேசம்
  2. நெதர்லாந்து
  3. நமிபியா
  4. ஸ்காட்லாந்து

ஒக்டோபர் 18ம் திகதி ஆரம்பமாகும் முதலாவது ஆட்டத்தில் இலங்கை-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு முன்னேறும்.

சூப்பர்12 சுற்றிலும் அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒரு பிரிவில்

  1. பாகிஸ்தான்
  2. அவுஸ்திரேலியா
  3. நியூசிலாந்து
  4. வெஸ்ட் இண்டீஸ்
  5. மற்றும் இரு லீக் சுற்று அணிகள்

மற்றொரு பிரிவில்

  1. இந்தியா
  2. இங்கிலாந்து
  3. தென்ஆப்பிரிக்கா
  4. ஆப்கானிஸ்தான்
  5. மற்றும் இரு லீக் சுற்று அணிகள் அங்கம் வகிக்கின்றன.