உலகில் இரண்டாவது முறையாக அதியுயர் இருபதவி !!

e
e

ஜனா­தி­பதி கோத்­தபாய­ ரா­ஜ­பக்ஷ கடந்த வாரம் தனது சகோ­தரர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை பிர­த­ம­ராக நிய­மித்­ததன் மூலம் இலங்­கையின் ஆட்­சி­ய­தி­கா­ரத்தின் அதி­யுயர் இரு பத­வி­களை வகிக்­கின்ற சகோ­த­ரர்கள் என்ற வர­லாற்றுச் சாத­னையை இலங்­கையில் படைத்­தி­ருக்­கி­றார்கள். ஆனால், உலகில் சகோ­த­ரர்கள் இருவர் ஜனா­தி­ப­தி­யா­கவும், பிர­த­ம­ரா­கவும் பதவி வகிக்­கின்ற இரண்­டா­வது சந்­தர்ப்பம் இது­வென்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

கிழக்கு ஐரோப்­பிய நாடான போலந்தில் 2006 ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தி­யாகப் பதவி வகித்த லெச் காசின்ஸ்கி, ஒரே மாதி­ரி­யான தோற்­றத்தைக் கொண்ட தனது இரட்டைச் சகோ­த­ர­ரான யாரோஸ்லோ காசின்ஸ்­கியை பிர­த­ம­ராக நிய­மித்­தி­ருந்தார்.

2005 டிசம்பர் மாதம் தொடக்கம் 2010 ஏப்ரல் மாதம் வரை ஜனா­தி­பதி லெச் காசின்ஸ்கி அப்பதவியை வகித்தார். பதவியிலிருந்த போதே அவர் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.