முக்­கிய அரச பத­வி­க­ளுக்கு இரா­ணுவ அதி­கா­ரி­கள்!!

images 1
images 1

இலங்­கையின் புதிய ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டுள்ள கோத்­தா­பய ராஜ­பக் ஷ முக்­கிய அரச பத­வி­க­ளுக்கு இரா­ணுவ அதி­கா­ரி­களை நிய­மிக்­கின்றார். ஆயுதம் தாங்­கிய பாது­காப்பு படை­யினர் வீதி­களில் இறங்­கலாம் என வர்த்­த­மானி அறி­வித்­தல்­களை வெளி­யி­டு­கின்றார். இவ்­வா­றான செயல்கள் ஊடாக சர்­வா­தி­கா­ரப் ­போக்­கு­டைய இரா­ணுவ ஆட்­சிக்கு வித்­தி­டு­கின்­றாரா என சந்­தேகம் எழுந்­துள்­ள­தாக முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சந்­தி­ர­சே­கரம் தெரி­வித்தார்.

யாழ்ப்­பா­ணத்தில் உள்ள ஜே.வி.பியின் கட்சி அலு­வ­ல­கத்தில் அவர் நேற்று நடத்­திய பத்­தி­ரி­கை­யாளர் சந்­திப்­பின்­போதே இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

நாட்டில் நடை­பெற்று முடிந்­துள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் இன­வா­தத்தை மத­வா­தத்தை தூண்டி சிங்­கள தேசி­யத்தை உசுப்­பேத்தி கோத்­தா­பய ராஜ­பக் ஷ பத­வியைப் பெற்று குளிர் காய்ந்து வரு­கின்றார். அவர் ஆட்­சிக்கு வந்­ததும் ராஜ­ப­க் ஷாக்­களின் குடும்ப ஆட்சி மீண்டும் நடந்­தே­றி­யுள்­ளது. ஒரு சகோ­தரர் பிர­தமர் இன்­னொரு சகோ­தரர் முக்­கிய அமைச்சர் என குடும்ப ஆட்சி மெல்ல மெல்லத் தொடங்­கி­யுள்­ளது. மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சியில் இருந்­த­போதும் இதே நிலை­மை­யான குடும்ப ஆட்­சியே காணப்­பட்­டது. ஜனா­தி­ப­தி­யாக கோத்­தா­பய பதவி ஏற்று உரை­யாற்றும் போதே தாம் தனிச்­சிங்­கள வாக்­கு­களில் வெற்­றி­பெற்­ற­தா­கவும் அனைத்து மக்­க­ளையும் தன்­னுடன் இணை­யு­மாறும் உரை­யாற்­றி­யி­ருந்தார். இது சிறு­பான்மை இனங்கள் மத்­தியில் பெரும் அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.ராஜ­பக் ஷ குடும்பம் ஆட்­சிக்கு வந்­து­ சில நாட்­க­ளி­லேயே தங்­க­ளுக்கு எதி­ராக தொடுக்­கப்­பட்­டுள்ள வழக்­குகள், விசா­ர­ணைகள் போன்­ற­வற்றில் தலை­யீடு செய்ய ஆரம்­பித்­துள்­ளனர். அதன் முக்­கிய சம்­ப­வ­மாக நாட்டின் புல­னாய்வுத் துறைப் பணிப்­பா­ள­ருக்கு இட­மாற்றம், பத­வி­இ­றக்கம் போன்ற நட­வ­டிக்­கை­களில் இறங்­கி­யுள்­ளனர்.

இது மட்­டு­மல்­லாது, அரசின் முக்­கிய உயர் பத­வி­க­ளுக்கு ஓய்வு பெற்ற இரா­ணுவ அதி­கா­ரி­களை நிய­மித்து வரு­கின்­றனர். அதிலும் குறிப்­பாக, இலங்­கையில் நடை­பெற்ற போரின்­போது பல குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்­குள்­ளான இரா­ணுவ அதி­கா­ரி­களை உயர் பத­வி­களில் அமர்த்­தி­யுள்ளார். இது நீதியை எதிர்­பார்த்­தி­ருக்கும் சிறு­பான்மை இன மக்­க­ளுக்கு பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இது­மட்­டு­மல்­லாது, நாடு முழு­வதும் ஆயுதம் தாங்­கிய பாது­காப்பு படை­யி­னரை நிலை­நி­றுத்­து­வ­தற்­கான வர்த்­த­மானி அறி­வித்­தல்­களை ஜனா­தி­பதி வெளி­யிட்­டுள்ளார்.இந்தச் செயற்­பா­டா­னது வடக்கு, கிழக்கில் மீண்டும் இரா­ணுவ பலப்­ப­டுத்­தலை எடுத்­துக்­காட்­டு­கின்­றது. எதிர்­கா­லத்தில் நடை­பெ­ற­வுள்ள பொதுத்­தேர்­தலில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையைப் பெறும் நோக்கில் ராஜ­பக் ஷ குடும்பம் சில காய்­ந­கர்த்­தல்­களை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றது. அந்த வகையில் பொதுத்­தேர்தல் நடை­பெறும் வரை அமை­தி­யாக பய­ணிக்கும் அவர்கள் தேர்­தலின் பின்னர் மீண்டும் குடும்ப ஆட்சி, அரா­ஜக ஆட்சி போக்கில் களம் இறங்கும்.கோத்­தா­பய ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாக தனிச்­சிங்­கள வாக்­கு­க­ளினால் வந்­துள்ளார். எனவே பொது­ப­ல­சேனா இனி இயங்­கத்­தே­வை­யில்லை என ஞான­சார தேரர் கூறி­யுள்ளார். அவர் ஏன் அவ்வாறு கூறினாரெனில், இத்தனை காலமும் பொதுபலசேனா செய்துவந்த மதவாத போக்கினை தற்போதைய அரசு செய்கின்றது. எதிர்காலத்திலும் செய்யும் என்பதாலேயே. எது எவ்வாறிருப்பினும், நாட்டில் ஜனநாயகம் மீறப்பட்டாலோ கடன் சுமைகள் அதிகரிக்கப்பட்டாலோ அரச வளங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டாலோ மக்கள் போராட் டங்கள் உருவாகும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றார்.