மாற்றம் நிகழாவிட்டால், தனியான பாதை!!

90 2
90 2

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றமொன்று நிகழாவிட்டால், தனியான பாதையொன்றில் பயணிக்க வேண்டிய நிலைமை ஏற்படுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினரான மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். மனுஷ நாணயக்கார மேலும் கூறியுள்ளதாவது, “நாம் அரசியலில் நுழைந்த காலத்தில் மட்டுமல்ல, நாம் பாடசாலைக்கு சென்ற காலத்தில் கூட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கதான் இருந்து வந்தார்.

ஆனால், இன்று எமது கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் கட்சியை புதிய பாதையில் வழிநடத்திச் செல்லவே எதிர்ப்பார்க்கிறார்கள்.

இதற்கு புதிய தலைமைத்துவமொன்று அவசியமாகவுள்ளது. சஜித் பிரேமதாச தலைமையிலான பயணத்தையே அனைவரும் விரும்புகிறார்கள்.

இதில் கட்சிக்குள் ஏதும் சிக்கல் ஏற்பட்டால், தனியாக பயணிப்போம் என்றும் பலர் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வேளையில், மக்களின் கருத்திற்கு செவி சாய்ப்பதுதான் உரிய ஒன்றாகும் என்று நாம் கருதுகிறோம்.

இதனை விடுத்து, தனிப்பட்ட அரசியல் சுயலாபத்திற்காக அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதை நாம் என்றும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” என குறிப்பிட்டுள்ளார்.